Home » செய்திகள் » 100 பெண்களிடம் பாலியல் செய்த ஜிலேபி பாபா மரணம் – சிறையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

100 பெண்களிடம் பாலியல் செய்த ஜிலேபி பாபா மரணம் – சிறையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

100 பெண்களிடம் பாலியல் செய்த ஜிலேபி பாபா மரணம் - சிறையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

100 பெண்களிடம் பாலியல் செய்த ஜிலேபி பாபா மரணம்: ஹரியானா மாநிலம் தோஹானா மாவட்டத்தில் இருக்கும் பாபா பாலகினாத் கோவிலில் குருக்களாக இருந்த அமர் புரி என்ற ஜிலேபி பாபா கடந்த 2018 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதாவது அவருடன் சேர்ந்து பூஜை செய்ய வரும் பெண் பக்தர்களுக்கு தேநீரில் போதை வஸ்துகளை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்த பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்த போது சில ஆபாச வீடியோக்கள் மற்றும் போதை மாத்திரைகளும் சிக்கின. குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் சில்மிஷம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு நீரிழிவு நோய் வந்த நிலையில் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜிலேபி பாபாவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் சிறையில் இருந்தபடியே உயிரிழந்துள்ளார். இதனை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தோஹானா ரயில் நிலையம் அருகே ஜிலேபி விற்று வந்ததால் அவரை அனைவரும் ஜிலேபி பாபா என்றழைத்ததாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Star Movie Review கவின் சினிமா கனவு நிறைவேறியதா? முழு திரைவிமர்சனம் இதோ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top