கேன்சர் மாத்திரை
தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால் மாற்று மருந்து இல்லாத காரணத்தால் இறக்கும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் உலக நாடுகளில் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக டாடா இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சமீபத்தில் ஒரு நிறுவனம் கேன்சருக்கான மருந்து ஆராய்ச்சியில் கடைசி கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தது. தற்போது டாடா இன்ஸ்டிடியூட் நிறுவனம் கேன்சர் குணமான பிறகு மீண்டும் புற்றுநோய் வராமல் இருக்கும் ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த மாத்திரையை தற்போது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஒப்புதல் வழங்கிய பின்னர் வருகிற ஜூன் – ஜூலை மாதங்களில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒரு மாத்திரையின் விலை ரூ.100 க்குள் இருக்கலாம் என அதன் ஆராய்ச்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.