
மகளிர் உரிமைத் தொகை 2024: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2025 முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை !
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 16 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் இணைய பல பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘ 2025 முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’.
பெண்களை கர்ப்பமாக்கினால் 20 லட்சம் சம்பளம் – இளைஞர்களை குறி வைக்கும் மர்ம கும்பல்!
அதுமட்டுமின்றி ‘முதியோர் உதவித்தொகைக்கு தற்போது விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள எல்லோருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்’ என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை