இந்தி, உருது மற்றும் மலையாளம் போன்ற மொழிகளை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம்:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் 10 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 100 மதிப்பெண் வீதம் தற்போது வரை 500 மதிப்பெண்ணுக்கு எழுதி வருகின்றனர் . ஆனால் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் தமிழில் அதிக கவனம் செலுத்தாததால், 10ம் வகுப்பு வரை தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் சிறுபான்மை மொழிகளான மலையாளம், உருது, இந்தி உள்ளிட்ட மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற வழக்கத்தை கொண்டு வந்தனர். இதையடுத்து அந்த மாணவர்கள் அவர்களுடைய தாய் மொழியை தேர்வாக எழுத வேண்டும் என்ற கோரிக்கையை வைத்த நிலையில், 4வது பாடமாக விருப்ப பாடம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் அப்படி அவர்களின் தாய்மொழியில் விருப்ப பாடத்தை எழுதினாலும் அதில் கிடைக்கும் மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என அறிவித்தனர். எனவே இது குறித்து சிறுபான்மை மொழி அமைப்புகளை சேர்ந்த சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விருப்ப பாடத்தையும் தேர்வுக்குரிய ஒரு பாடமாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பிரம்மாண்ட “பாகுபலி” பட பிரபலத்தின் மனைவி திடீர் மரணம்.., பின்னணி காரணம் என்ன?- சோகத்தில் திரையுலகம்!!
அதன்படி அடுத்த கல்வியாண்டில் (24-25) மற்ற மொழிகளை விருப்ப பாடமாக கொண்ட மாணவர்களுக்கு 6 படங்களை வைத்து 600 மதிப்பெண்களும், அதில் விருப்பம் படத்தில் 35 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் தமிழ் தாய் மொழி கொண்ட மாணவர்கள் வழக்கம் போல் 5 படங்களில் எந்த வித மாற்றமும் இல்லை. ஒவ்வொரு படத்திலும் 35 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த புதிய விதி பொருந்தும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.