2 நாட்களுக்கு 144 தடை - டெல்லி காவல்துறை அறிவிப்பு !2 நாட்களுக்கு 144 தடை - டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடவடைந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை, அதன் காரணமாக அதிக இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கிறது.

நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் மோடி மீண்டும் பதவியேற்க குடியரசுத்தலைவரிடம் உரிமைகோரியுள்ளதாக தகவல் வெளியானது.

அந்த வகையில் நாளை இரவு 7.15 மணியளவில் டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி சார்பில் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் இந்த விழாவிற்கு உலகத்தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதால் டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் காவல்துறை 144 அறிவித்துள்ளது. மேலும் ட்ரோன்கள் பறக்க வும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *