இலங்கை(sri lanka) அணிக்கும் தென்னாபிரிக்க(south africa) அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நேற்று தென்னாபிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ் மீட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. முதலில் பேட்டிங் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 191 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை அணி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மோசமான சாதனை!
அதாவது, முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி தென்னாபிரிக்க வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த வெறும் 42 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்படி, மென்டிஸ் 13, லகிரு குமார 10 அதிகபட்ச ரன்களை எடுத்துள்ளனர்.
BSNL-ன் ரூ.91-க்கு அசத்தல் திட்டம் – எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா? இன்ப மகிழ்ச்சியில் பயனர்கள்!!
மற்ற வீரர்கள் எட்டு ரன்களுக்குள் சுருண்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில், 2வது மிக குறைந்த ரன்களை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா வெறும் 36 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 3வது இடத்தில், 46 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்