
Breaking News: இரண்டு லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்: இந்த சுதந்திர உலகத்தில் ஒரு தனிமனிதன் முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று அரசாங்கமே சொல்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கிட்டத்தட்ட 2 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளனர்.
இரண்டு லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்
இது தொடர்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சதா, ” இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று (துறந்துவிட்டு) எத்தனை பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்கள் அப்படி சென்றதற்கான காரணங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் கடந்த 2023-ம் ஆண்டில் சுமார் 2 லட்சத்து 16 ஆயிரத்து 219 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கூறி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் தங்களின் குடியுரிமையை துறப்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது.
Also Read: மக்களே உஷாரா இருந்துக்கோங்க – ஆதார் கார்டு அப்டேட் செய்யவில்லையா? காலக்கெடு கொடுத்த அரசு!!
இதில் நம்மால் தலையிட முடியாது. மேலும் இன்றைய அறிவுசார் பொருளாதாரத்தில் உலகளாவிய பணியிட திறனை அரசும் அங்கீகரிக்கிறது. இதனால் வெற்றிகரமான, வளமையான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்தோர் இநதியாவின் சொத்தாக திகழ்கின்றனர். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீடு தேடி வரும் 5 ஆயிரம் ரூபாய்
கேரள மாநிலத்திற்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை