20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் - வழக்கு தொடர்ந்த பெண் - இது என்னடா புதுசா இருக்கு!20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் - வழக்கு தொடர்ந்த பெண் - இது என்னடா புதுசா இருக்கு!

பிரபல நிறுவனத்தில் 20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்: இப்போது இருக்கும் காலகட்டத்தில் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இப்படி இருக்கையில் 20 வருடமாக வேலையே பார்க்காத பெண்ணுக்கு சம்பளம் கொடுத்ததாக கூறி அந்த பெண்ணே வழக்கு தொடர்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “லாரன்ஸ் வான்” என்ற பெண் டெலிகாம் நிறுவனத்தில்  கடந்த 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு அந்த சமயத்தில் பக்கவாதம் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணுக்கு வேலை அதிகமாக கொடுக்காமல் அவரால் முடியும் அளவுக்கு வேலை கொடுத்து வந்துள்ளது அந்த நிறுவனம். இதனை தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு வரை அவர் வேலை செய்த நிலையில், அதன்பிறகு அவரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்தனர். அதற்கு ஆரஞ்சு நிறுவனம் என்று பெயரும் வைத்தனர். அப்போதும் அவருக்கு போதிய வேலை கொடுக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சம்பளம் மட்டும் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.

20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் – வழக்கு தொடர்ந்த பெண் – இது என்னடா புதுசா இருக்கு!

அதில், “தனக்கு வேலை கொடுக்காமல் கடந்த 20 ஆண்டுகளாக முழு சம்பளத்தையும் ஆரஞ்சு நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் எனக்கு  தார்மீக துன்புறுத்தலை அந்த நிறுவனம் கொடுத்துள்ளது. இதனால் என்னால்  தொழில்முறை அனுபவத்தை இழக்க நேரிடும் என்றும் மனு அளித்துள்ளார். ஆனால் இதை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. அவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தான் பணிகள் வழங்கப்பட்டது என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், வேலை கொடுக்காமல் சம்பளம் கொடுத்ததால் வழக்கா என்று வாயடைத்து போய் உள்ளனர். இன்னும் சிலர் வேலை பார்க்காமல் சம்பளம் வாங்கியதை அவர் மனம் ஏற்கவில்லை என்று கூறி வருகின்றனர். மற்றும் பலர் அவர் ஆரம்பத்துலயே வழக்கு கொடுத்திருக்கலாம் 20 ஆண்டுகள் ஓசியாக வாங்குகிறோம் என்று அவருக்கு தெரியவில்லையா என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *