டெங்கு அதிகரிப்பு 20000 பேர் மருத்துவமனைகளில் அனுமதி. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.
டெங்கு அதிகரிப்பு 20000 பேர் மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே
டெங்கு பரவும் விதம் :
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அங்கங்கே மழை நீர் தேங்கி விடுகின்றது. அதிலிருந்து ஏடிஸ்
ஈஜிப்டி வகை கொசுக்கள் ஆயிரக்கணக்கில் உற்பத்தியாகின்றது. கொசுவின் மூலமே மனிதர்களுக்கு இந்நோய் பரவுகின்றது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.
JOIN WHATSAPP | CLICK HERE |
அறிகுறிகள் :
1. காய்ச்சல்
2. மஞ்சள் காமாலை
3. சிக்கன்குனியா
4. தலைவலி
5. உடல் வலி
6. வாந்தி மற்றும் குமட்டல்
7. அதிகளவு ரத்த போக்கு போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் மக்களுக்கு இருக்கும் பொது அவைகள் டெங்கு காய்ச்சலாக மாறும்.
டெங்கு தடுப்பூசி :
டெங்கு காய்ச்சலை தடுக்க வேண்டும் என்பதற்கு தனியாக தடுப்பூசிகள் என்று எதுவும் கிடையாது. மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின் ஆரம்பத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். ஆரம்பத்தில் டெங்கு கண்டறியாமல் சிகிச்சை அளிக்காமல் இருந்தால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.
வங்கதேசத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு :
பருமமழை காலமாகிய ஜூன் முதல் செப்டம்பர் காலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கின்றது. கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழப்பும் அதிகரித்து உள்ளது.
தற்போது வரையில் 1,006 பேர்கள் நோய் பாதிப்பினால் இறந்துள்ளனர். மேலும் 20,000க்கும் அதிகமான நபர்கள் நோய் தாக்கத்தினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வங்கதேசத்தில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கு போதுமான இடம் இல்லை. அதிகமான நபர்களில் வீடுகளில் இருந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தமிழகத்தில் நாளை மின்தடை ! சார்ஜ் இப்போவே போட்டுக்கோங்க மக்களே !
தமிழகத்தில் டெங்கு உயிரிழப்பு :
தமிழகத்திலும் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை விட தற்போது அதிகரித்து உள்ளது. மேலும் வருகின்ற இரண்டு மாதங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
டெங்கு தடுப்பு முறைகள் :
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகையான கொசுக்கள் நம் வீட்டின் அருகில் தேங்கும் நீரினால் உருவாகின்றது. இனி அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து மழை இருக்கும். எனவே மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. அரசின் சார்பில் நடக்கும் காய்ச்சல் தடுப்பு முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்.
டெங்கு காய்ச்சல் ஒழிப்பிற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் டெங்கு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.