2023ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.., என்னது.., இந்த லிஸ்ட்ல பிக்பாஸ் நடிகரும் இருக்காரா? யாருன்னு தெரிகிறதா? 2023ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.., என்னது.., இந்த லிஸ்ட்ல பிக்பாஸ் நடிகரும் இருக்காரா? யாருன்னு தெரிகிறதா? 

சினிமாவில் நுழைந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் ஜோதிகா, சூர்யா  போல் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த 2023ல் முன்னணி நடிகர், நடிகைகள் முதல் இளம் நடிகர், நடிகைகள் வரை கல்யாணம் செய்துள்ளார். அது எந்தெந்த நடிகர் நடிகைகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும்  கவின் நீண்ட கால தோழியாக இருந்த மோனிகா என்பவரை காதலித்து ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து செப்டம்பர் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பிரபல நடிகையும் இயக்குனர் விஜய்யின் முன்னாள் மனைவியுமான  அமலா பால் தொழிலதிபர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த மாதம் 5ம் தேதி கல்யாணம் செய்து கொண்டார்.

பிரபல  நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகாவுக்கு பெற்றோர் முன்னிலையில் தொழிலதிபர் ரோஷன் என்பவருடன் கடந்த மாதம் 19ம் தேதி திருமணம் முடிந்தது.

தற்போது வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கி வரும் ரெடின் கிங்ஸ்லி, சின்னத்திரை நடிகை சங்கீதாவை கடந்த 10ம் தேதி காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது அவர்கள் ரெண்டு பேருக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த வருடம் அவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *