2023ம் ஆண்டை கலக்கிய கனவு நாயகிகள்.., உங்களுக்கு பிடித்த ஹீரோயின் இருக்காங்களான்னு பாருங்களே?2023ம் ஆண்டை கலக்கிய கனவு நாயகிகள்.., உங்களுக்கு பிடித்த ஹீரோயின் இருக்காங்களான்னு பாருங்களே?

தமிழ் சினிமாவில் இந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 200, 300 கோடிகளை தாண்டி சிறிய பட்ஜெட்டில் வெளியான படங்களும் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் நெறய புதுமுக நடிகைகள் என்ட்ரி பல திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அப்படி பிளாக் பஸ்டர் கொடுத்த டாப் 5 நடிகைள் யார் என்று இந்த தொடுப்பில் பார்க்கலாம் வாங்க.

மேத்தா ரகுநாத் முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தில் முதலில் நடித்திருந்தாலும், குட் நைட் திரைப்படமே அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது என்று சொல்லலாம். இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் பாலியல் கொடுமை குறித்து வெளியான இந்த படத்தில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கருவுக்கு உயிர் கொடுத்தவர் தான் நிமிஷா சஜயன்

எந்த வித மேக்கப்பும் போடாமல், சரியாக தமிழ் பேச தெரியாமல் ஒட்டு மொத்த ரசிகர்களை தனது கண்ணீர் மூலம் கவர்ந்தவர் தான் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி.

காதலின் ஆழத்தை பிரிந்து நடித்து இப்படியொரு காதலி நமக்கு கிடைக்காதா என்று இளைஞர்களை ஏங்க வைத்தவர் தான் மாளவிகா மனோஜ்.

மலர் டீச்சரை தொடர்ந்து தனுசுடன் இணைந்து டீச்சராக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் சம்யுக்தா மேனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *