தீபாவளிக்கு 14016 சிறப்பு பேருந்துகள் 2024: தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே வெளியூரில் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
தீபாவளிக்கு 14016 சிறப்பு பேருந்துகள் 2024
இதனால் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவுகள் வேகமாக முடிந்துள்ளது. மேலும் புக்கிங் செய்யாத மக்கள் பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதில், அக்டோபர் 28 தொடங்கி 30ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை கிட்டத்தட்ட 14,016 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 11,176 பேருந்துகள் சென்னையில் உள்ள 5 பேருந்துகளில் இருந்து இயக்கப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
குறிப்பாக கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் தாம்பரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது. அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வருவதற்கு சுமார் 9,441 பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?