CSK ரசிகர்களே
கிரிக்கெட் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர் என்றால் அது IPL தான். இந்த வருடத்திற்கான சீசன் வருகிற 22ம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. இதில் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து வருகிற 26ம் தேதி குஜராத் அணிக்கும் CSK க்கும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே தல தோனியின் கடைசி சீசன் என்பதால் அவரின் ஆட்டத்தை காண ரசிகர்கள் கூட்டம் கண்டிப்பாக அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
கடந்த ஆண்டு டிக்கெட் கவுண்டரில் வாங்கி அதை சிலர் அதிக விலைக்கு விற்றதாக புகார்கள் எழுந்தன. எனவே இதை கருத்தில் கொண்டு சேப்பாக்கம் மைதானம் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலமாகவே விநியோகிக்கப்படும் என்று நேரடி டிக்கெட் விற்பனை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக விலைக்கு டிக்கெட் வாங்கும் அவல நிலை ஏற்படாது என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.