இந்த ஆண்டு 2024ன் ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை -யாக “Brain Rot” தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024ன் சிறந்த வார்த்தை “Brain Rot” : ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி அதிரடி அறிவிப்பு!
இன்றைய சூழ்நிலையில் நம் அனைவரது கையிலும் செல்போன் இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் மூழ்கி கிடக்கின்றன. ஓய்வில்லாமல் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் பதிவுகளை ஸ்க்ரோல் செய்யும் மக்களின் கவலைக்கு மத்தியில் தற்போது ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் 2024ன் சிறந்த வார்த்தை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு 2024 ஆண்டு சிறந்த வார்த்தையாக Brain Rot என அறிவித்துள்ளது. 1854 ஆம் ஆண்டிலிருந்து இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹென்றி டேவிட் தோரோவின் புத்தகமான “வால்டன்” -ல் இந்த வார்த்தை முதன் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக அளவு, சமூக வலைதள நுகர்வு காரணமாக ஏற்படும் ஒருவரின் மன/அறிவு சார் நிலையின் “சீரழிவு” என்பதே இந்த வார்த்தையின் அர்த்தமாகும்.
மதுபானம் குடிப்பதால் மறதி ஏற்படும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
குறிப்பாக அற்பமான அல்லது தேவையற்ற ஆன்லைன் உள்ளடக்கத்தை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படுகிறது. மேலும் இந்த வார்த்தை என்பது மெய்நிகர் வாழ்க்கையின் ஆபத்துக்களில் ஒன்றைப் பற்றியும், நமது ஓய்வு நேரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றியும் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்