பொங்கல் உலகத் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை தமிழர் திருநாளான தைப்பொங்கல் ஆகும். பொங்கல் பண்டிகையானது சாதி, சமய, மதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் பண்டிகை உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடா வருடம் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசுதொகை அறிவிப்பது வழக்கம். அவ்வாறு 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பின் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசாணை :
வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பரிசுத்தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் தமிழர்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்புடன் கூடிய தொகுப்பு இந்த ஆண்டு பரிசுத்தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பரிசுத்தொகுப்புக்கான மொத்த செலவாக ரூ. 238,92,72,741 (இருநூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும் ) கணக்கிடப்பட்டுள்ளது.
பொருட்கள் :
சர்க்கரை,
பச்சரிசி,
ஒரு முழுக்கரும்பு.
பொருட்களின் அளவு :
பச்சரிசி – 1 கிலோ.
சர்க்கரை – 1கிலோ.
ஒரு முழுக்கரும்பு – 1 எண்ணம்.
குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை :
2,19,57,402
தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கொள்முதல் விலை :
பச்சரிசி (1 கிலோ ) – ரூ. 35.20.
சர்க்கரை(1 கிலோ ) – ரூ. 40.614.
ஒரு முழுக்கரும்பு 1 – ரூ. 33 (போக்குவரத்து மற்றும் வெட்டு கூலி உட்பட )
மொத்த செலவு:
மேற்கண்ட பரிசுத்தொகுப்பிற்க்கான மொத்த செலவு தொகை – 238,92,72,741 (இருநூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும் ) என்று கணக்கிடப்பட்டுள்ளது.