கிராம உதவியாளர்
மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை அடுத்தடுத்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருக்கும் 2299 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பணியில் சேருவதற்கு வயது 21 – 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு சேர விரும்புபவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் பெற்றோரை இழந்தோர், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவை கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இந்த பணிக்கு சம்பளமாக ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். அதுமட்டுமின்றி 10 ஆண்டுகளுக்கு பின்பு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனவே www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து அரசு வேலையை கையில் பெறுங்கள்.