
மகிழ்ச்சியான நாடுகள்
ஒரு தனி மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கிய அங்கமாக இருந்து வருவது சந்தோஷம் தான். அப்படி மகிழ்ச்சியில் திளைக்கும் உலக நாடுகள் என்னென்ன என்று கடந்த 10 வருடங்களாக ஐ.நா. வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதாவது இந்த பட்டியலை, ஒரு நாட்டின் தனி நபர்களின் வாழ்க்கை திருப்தி, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, தாராள மனப்பான்மை மற்றும் மற்றும் ஊழல் உள்ளிட்ட அடிப்படையில் ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதன்படி கடந்த ஏழு ஆண்டுகளாக பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, கோஸ்டாரிகா, குவைத் ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?. அதாவது உலகின் மகிழ்ச்சியான நாடுகள் லிஸ்ட்டில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதனை பார்த்த இந்தியர்கள் மோசமான இடத்தில் இந்தியா இருப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.