2025 புத்தாண்டு ராசிபலன்கள்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ராசிபலன் பார்க்காத ஆட்களே இருக்க முடியாது. காலண்டரில் ஆரம்பித்து தொலைக்காட்சியில் ஜோதிடர் தனது ராசிக்கு என்ன சொல்கிறார் என்பதை பார்ப்பது வரை ஆன்மிகத்தில் முழ்கியுள்ளனர்.
2025 புத்தாண்டு ராசிபலன்கள்
ஒவ்வொரு புத்தாண்டிலும் குறிபிட்ட ராசிகள் உச்சத்தை அடையும். அந்த வகையில் வருகிற 2025ம் ஆண்டில் நடக்க இருக்கும் கிரக பெயர்ச்சி, கிரக சேர்க்கை காரணமாக ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிகளை சேர்ந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மேம்படுதல் என பல நன்மைகள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 2025 புத்தாண்டில் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு கொட்ட போகிறது. திருமணம் நடக்காமல் இருக்கும் வாலிபர்களுக்கும், கல்யாண முயற்சியில் ஈடுபடுவர்களுக்கும் நல்ல வரன் அமைந்து அடுத்த வருடத்தில் கல்யாணம் முடியும். மேலும் இந்த ராசிகாரர்கள் தங்களது வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை நிறைந்திருக்கும். குழந்தைகளின் விஷயத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடன் தொல்லையில் இருந்து விடிவு காலம் பிறக்கும். உங்களின் செல்வ வளம் பெருகும். சொத்து சேர்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களின் கடின உழைப்புக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிம்மம்:
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு அடுத்த ஆண்டு (2025) புத்தாண்டில் பல வித வழிகளில் அதிர்ஷ்டம் வந்து சேரும். உங்களின் வணிகத்தில் முன்னேற்றமும், புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைக்கும். மேலும் புதிய நண்பர்கள் வாயிலாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த ஆண்டு உங்களுடைய தொழிலை மேம்படுத்த வாய்ப்புகள் உண்டாகும். இந்த நேயர்களுக்கு வெளியூர், வெளிநாடு மூலம் வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 2025 புத்தாண்டில் குல தெய்வங்கள், கிரகங்களின் ஆசி நிறைந்ததாக இருக்கும். மேலும் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் வெற்றிக்கான அதிர்ஷ்டங்கள் நிறைந்து காணப்படும். அதுமட்டுமின்றி புதிதாக நீங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு முக்கிய வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
Also Read: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் – எப்போது நடைபெறுகிறது தெரியுமா?
துலாம்:
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 2025 புத்தாண்டில் தொழில் ரீதியாக முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான சாதகமான பலன்கள் கிடைக்கும்.
மேலும் நீங்கள் பார்க்கும் உத்தியோகத்தில் உயர் பதவியும், பாராட்டும் கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கான பலனை அனுபவிப்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 2025 புத்தாண்டில் மிக சிறப்பான அனுகூலங்கள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகத்தில் பணிச்சூழல் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024
திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை