போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி
கடந்த சில நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் காரர்களுக்கு அவர்களுக்கு கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஹரியானா எல்லை பகுதியை முற்றுகையிட்டு உயர்தர டிராக்டர் உள்ளிட்டவைகளை கொண்டு போராட்டம் நடத்தினர்.அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சி செய்த போது மோதல் வெடிக்க தொடங்கியது. இதில் 16 போலிக்காரர்களுக்கு பலத்த காயமும், மூன்று விவசாயிகள் பெரிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த மூன்று விவசாயிகளில் 22 வயதே ஆன இளம் நபர் உயிரிழந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அவரின் இறப்புக்கு காரணம் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது தான் என்று விவசாய சங்க தலைவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இறந்த அந்த இளம் விவசாயிக்கு அரசு சார்பில் சலுகை வழங்க வேண்டும் என்றும், அவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டும் என்றும் விவசாய சங்க தலைவர் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு அதை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி இறந்த இளம் விவசாயின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி நிதியுதவி என்றும் ஒரு சகோதரிக்கு அரசாங்க வேலை தர மத்திய அரசு தெரிவித்துள்ளது.