
இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர்
இந்த உலகத்தில் எத்தனையோ நோய்கள் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது, அதில் சிலவற்றைக்கு மட்டும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் சில நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் உள்ளவர்களுக்கு தலைக்கு கீழ் உள்ள எந்த பாகமும் செயல்படாது. அந்த நோயால் பாதிக்கப்பட்ட அவர் மூச்சு விட முடியாமல் சிரமம் பட்டதால் அவருக்கு மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதன்பின் 272 கிலோ எடையுள்ள இயந்திர நுரையீரலின் உதவியால் உயிர் பிழைத்தார். இதையடுத்து அந்த இயந்திரத்துக்குள் வாழும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சொல்ல போனால் ஒரு ஆண்டு இரு ஆண்டு இல்லை அவருடைய வாழ்நாள் ,முழுக்க அதில் இருந்துள்ளார். கிட்டத்தட்ட 70 ஆண்டு கால வாழ்க்கையை கழித்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பால் அலெக்சாண்டர் அவரது கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆனார். பின் தனது கதையை மக்களுக்கு தெரிவித்து ஒரு எழுத்தாளராகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் GOAT படத்தில் இணைந்த திருமணம் ஆகாத 40 வயது நடிகை.., தளபதியோட 6வது முறையா?.., யார் தெரியுமா?
சமீபத்திய செய்திகள்: