கன்னியாகுமரியில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் லீவு விடப்பட்டுள்ள நிலையில் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தை கிட்டத்தட்ட 4829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் வாயிலாக அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 100 முதல் 120 கோடியும் ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மேல் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி மக்களுக்கு கொண்டு வரும் திட்டங்களுக்கான நிதியை வாரி வழங்கும் குடோனாகவே டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி, பொங்கல் என விசேஷ நாட்கள் வந்தாலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.
கன்னியாகுமரியில் மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் லீவு – மதுப்பிரியர்களுக்கு வெளியான ஷாக் தகவல்!
புயல் மழை வந்தாலும் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுக்கப்படவில்லை. ஆனால் அரசின் முக்கிய நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு லீவு விடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு சவேரியார் பேராலயம் மிகவும் சிறப்பு பெற்றதாக உள்ளது.
Infosys-க்கு 238 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!
இந்த திருக்கோயில் திருவிழாவை பார்க்க பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே நாளை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நல்ல நாளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட கூடாது என்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்