Home » செய்திகள் » “தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது” .., 3 அடியில் மருத்துவராகி சாதனை படைத்த மனிதன்!!

“தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது” .., 3 அடியில் மருத்துவராகி சாதனை படைத்த மனிதன்!!

"தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது" .., 3 அடியில் மருத்துவராகி சாதனை படைத்த மனிதன்!!

3 அடியில் மருத்துவராகி சாதனை

தற்போதைய காலகட்டத்தில் உடலில் பல குறைபாடுகள் இருந்தாலும் தான் நினைத்த ஒன்றை சிலர் முடித்து காட்டி வருகின்றனர். அந்த வகையில் 3 அடி இருக்கும் ஒரு நபர் மருத்துவரான சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது குஜராத் மாநிலத்தை சேர்ந்த  கணேஷ் பாரையா என்பவர் 72% உயர குறைபாடுடன் பிறந்தவர். குறைந்தபட்சம் 3 அடி உயரம் உடைய  அவர்,எப்படியாவது  மருத்துவராக ஆக வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்து கனவாக இருந்துள்ளது. ஆனால் அவரின் உயரத்தை காரணம் காட்டி  இந்திய மருத்துவக் கவுன்சில் நிராகரித்தது. அதாவது அவரச சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை இவரால் சமாளிக்க முடியாது என்ற காரணத்தை முன்வைத்து நிராகரித்தது.

தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?

இருப்பினும் அவர் சோர்ந்து போகாமல் நீதிமன்றம் வரை சென்று படிப்புக்காக அனுமதி வாங்கினார். இதனை தொடர்ந்து 2019 -ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த கணேஷ் கண்ணும் கருத்துமாய் படித்து தனது கணவான MBBS படிப்பையும் முடித்தார். தற்போது இவர் பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். ஒரு நாற்காலியில் நின்று நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்து பாராட்டி வருகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது வடசென்னை படத்தில் இடமாற்ற “தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது” என்ற வசனம் தான் நியாபகம் வருகிறது.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top