Home » செய்திகள் » 2025 பொங்கல் பரிசு தொகுப்பு..,  இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!

2025 பொங்கல் பரிசு தொகுப்பு..,  இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!

2025 பொங்கல் பரிசு தொகுப்பு..,  இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Pongal Price:

ஒவ்வொரு வருடமும் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் திருநாள் தான். அந்த நல்ல நாளில் எல்லாரு வீட்டிலையும் பொங்கல் சமைத்து அதை சாமிக்கு படைப்பார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம்  தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆண்டுதோறும் ‘பொங்கல் பரிசு’ வழங்கப்பட்டு வருகிறது.

2025 பொங்கல் பரிசு தொகுப்பு..,  இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!

அந்த வகையில், அடுத்த ஆண்டு 2025 கொண்டாடவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்   இன்று முதல்(18.12.2024) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் முதலிய 7 பொருட்களை கொண்ட “இனிப்பு பொங்கல் தொகுப்பு” 199 ரூபாய்க்கும், அதே போல் மஞ்சள் தூள், சர்க்கரை, பருப்பு வகையில், எண்ணெய் முதலிய 19 பொருட்கள் கொண்ட “கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு” 499 ரூபாய்க்கும் மற்றும் உளுத்தம் பருப்பு, பச்சை பட்டாணி, சீரகம், வெந்தயம், ஜவ்வரிசி முதலிய 35  பொருட்களை உள்ளடக்கிய “பெரும் பொங்கல் தொகுப்பு” 999 ரூபாய்க்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும்  பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மக்கள் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற்று தமிழர் திரு நாளை வெகு விமர்சையாக கொண்டாடுங்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு

ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!

செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!!

ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!

தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top