அகவிலைப்படி 4% உயர்வுஅகவிலைப்படி 4% உயர்வு

  அகவிலைப்படி 4% உயர்வு. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருக்கோவில் பணியாளர்களுக்கு ஜூலை முதல் அகவிலைப்படி 4% உயர்த்தி 46% வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அகவிலைப்படி 4% உயர்வு

அகவிலைப்படி உயர்த்தும் தமிழக அரசு :

  தமிழக அரசின் கீழ் பல்வேறு அலுவலங்களில் பணி செய்யும் பணியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றது. தற்போது தான் ஆசிரியர்களுக்கு அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு அகவிலைப்படியை 46% ஆக அரசு உயர்த்தியது. அதன் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருக்கோவிலில் பணி செய்பவர்களுக்கும் அகவிலைப்படியை அரசு உயர்த்தி உள்ளது.

JOIN SKSPREAD WHATSAPP

46% ஆக உயர்வு :

  திருக்கோவில்களில் அதாவது ஆண்டுக்கு 1லட்சத்திற்கு மேல் வரும் வரும் கோவில்களில் நிரந்தர பணி செய்யும் பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 42% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடச்சியாக தற்போது அகவிலைப்படியை 4% ஆக உயர்த்தி 1.07.2023 முதல் 46% ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. 

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 04.11.2023 ) ! டைம் 9 அப்போ கரண்ட் போயிடும் ! 

கட்டுப்பாடுகள் :

  திருக்கோவில் பணியாளர்களுக்கு 46% அகவிலைப்படி உயர்த்தி இருப்பதில் சில கட்டுப்பாடுகள் உள்ளது. பகுதி நேர பணி , தினக்கூலி பெறும் நபர்கள் , அங்கீகரிப்பப்பட்ட பணியாளர்கள் மற்றும் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பொருந்தாது. இந்து சமய அறநிலையத்துறையின் நிரந்தர பணியாளர்கள் மட்டுமே அகவிலைப்படி உயர்வை பெற தகுதியானவர்கள்.

அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு திருக்கோவில் பணியாளர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *