
கென்யாவில் 42 பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ: உலகின் பல்வேறு பகுதிகளில் சில சைக்கோ கில்லர் மறைமுகமாக இன்னும் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி 42 பெண்களை கொடூரமாக கொன்ற ஒரு கொலைகாரனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதாவது, கென்யாவைச் சேர்ந்த ஜோமைசி கலிசியா என்பவர் தனது மனைவியை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று பெண்ணின் வீட்டார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தது.
42 பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ

அப்போது கணவன் ஜோமைசி கலிசியா மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரை காவல்துறை விசாரணை செய்த போது சில திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.
Also Read: ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்த ஏத்தர் நிறுவனம் – அப்படி என்ன விசேஷம் இருக்கு தெரியுமா?
அதில் அவருடைய மனைவியின் சடலமும் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக அவரை காவல்துறை கைது செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ?
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை