45வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்: மக்களுக்கு மிகவும் பிடித்த செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வெண்கல பதக்கத்தை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹங்கேரியில் இன்று 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரம்மாண்டமாக ஆரம்பித்தது.
45வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்
எனவே இந்த போட்டியில் இந்தியா சார்பாக ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, குகேஷ், ஹரிகிருஷ்ணா பெந்தாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Also Read: சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ் – எங்கு எப்போது தெரியுமா ?
அதே போல் பெண்கள் பிரிவு அணியில் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், வைஷாலி, ஹரிகா, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இன்று ஆரம்பிக்கும் இந்த போட்டி செப் 23ம் தேதி வரை நடைபெறும். இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், மகளிர் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன. இம்முறை பிரக்ஞானந்தா பதக்கம் வெல்வாரா? என்பதை பொறுத்து பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்