47 வது அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை நிறைவு பெற்றது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு மிக அருகில் முன்னிலை வகித்து வந்தார்.
கமலா ஹாரிஸ் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 47 வது அதிபராக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
47 வது அமெரிக்க அதிபர் தேர்தல்
அதன்படி 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 51% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக சொல்ல போன மொத்தமுள்ள 538 எலெக்டோரல் வாக்குகளில், டிரம்ப் 277 வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப் – வெற்றி பெறுவாரா?
பொதுவாக தேர்தலில் வெற்றி பெற 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், டிரம்ப் தற்போது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டொனால்டு டிரம்ப் வெற்றி எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு