2025 கோடையில் குஷிப்படுத்த வரும் 5 படங்கள்: பொதுவாக கோடை விடுமுறை வந்துவிட்டால் போதும் பெரும்பாலான ரசிகர்கள் எந்த ஹீரோவின் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த வருட கோடை விடுமுறையில் ஐந்து படங்கள் வெளியாக இருக்கிறது.
2025 கோடையில் குஷிப்படுத்த வரும் 5 படங்கள்.. ஸ்கோர் செய்ய வரும் வடிவேலு – சந்தானம்!!
குட் பேட் அக்லி:
பத்ம பூஷன் நாயகன் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் OG சம்பவம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் படம்:
தளபதி நடிப்பில் கடந்த 2005ல் வெளியான திரைப்படம் தான் சச்சின். சமீபகாலமாக ரீ ரிலீஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது விஜய்யின் சச்சின் படமும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ரீ ரிலீசாக இருக்கிறது. இதற்கு முன்னர் ரீ ரிலீஸ் ஆன கில்லி திரைப்படம் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேங்கர்ஸ்:
அரண்மனை 4 படத்திற்கு சுந்தர்.சி இயக்கி வரும் கேங்கர்ஸ் படத்தில் காமெடி கிங் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சுந்தர். சி – வடிவேலு என்ற மாஸ் கூட்டணியில் தலைநகரம், நகரம் போன்ற படங்கள் அமோக வரவேற்பை பெற்றது. மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
ரெட்ரோ:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ரெட்ரோ. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மேலும் இந்த திரைப்படம் வருகிற மே 1ம் தேதி தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது.
ஃபயர் ரச்சிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
டிடி நெக்ஸ்ட் லெவல்:
சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெற்றி வாகை சூடியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படம் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?