70-வது தேசிய திரைப்பட விருது 2024: தென்னிந்திய தமிழ் சினிமாவில் எப்படியாவது உயர்தர விருதுகளை வெல்ல வேண்டும் என்று நட்சத்திரங்கள் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். இன்னும் சொல்ல போனால் எந்த ஒரு கஷ்டமான கதாபத்திரங்கள் கொடுத்தாலும் கூட இஷ்டப்பட்டு நடித்து வருகின்றனர். இப்படி உழைக்கும் கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் தேசிய விருது.
அந்த வகையில் நேற்று முன் தினம் 2024, 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பலரும் விருதுகள் வாங்கிய நிலையில் பொன்னியின் செல்வன் படத்துக்காக கிட்டத்தட்ட 4 விருதுகள் கிடைத்தது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி விருது வாங்கினார். ஆனால் இவர் ஒரு நடிகர் என்று யாருக்காவது தெரியுமா? அட ஆமாங்க, அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கடந்த 1990 ஆண்டு வெளியான திரைப்படம் தான் அஞ்சலி.
ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா! டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்!
இதில் ஒரு குழந்தையாக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். விருது பெற்ற கையோடு செய்தியாளர்களை சந்தித்து ஆனந்த் பேசியுள்ளார். அதில், “பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக 4 விருதுகளை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது திறமைக்கு கிடைத்த பரிசு” என்று கூறியுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா”
தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்
நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?