
போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி. இந்தியாவில் உள்ள மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் அவற்றிற்க்கு இடையில் உள்ள டோல் கேட்டை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய நிலை இருக்கிறது.மேலும் பாஸ்ட் டேக் போன்ற முறைகளை பயன்படுத்தி நாம் கட்டணம் செலுத்திக்கொள்ளாம். இந்தநிலையில் இந்த முறையில் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேட்ரம் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் மோர்பி மாவட்டத்தில் நடந்துள்ளது.
போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி
குஜராத் போலி டோல் கேட் :
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள பாமன் போர் மற்றும் கட்ச் இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். இதன் அருகில் வர்காசிய என்ற இடத்தில் அரசு அனுமதி பெற்ற சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. பாமன் போர் மற்றும் கட்ச் இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வைட் ஹவுஸ் செராமிக் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் போலி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வர்காசிய வழியாக செல்ல கூடிய வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு போலி சுங்கச்சாவடி வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
75 கோடி ரூபாய் சுருட்டல்:
இதன் மூலம் அரசு அனுமதி பெறாமல் மற்றும் அரசிற்க்கு தெரியாமல் போலி சுங்கச்சாவடி அமைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வழியில் செல்லும் வாகனங்களில் கட்டணம் பெறப்பட்டு கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாமன் போர் மற்றும் கட்ச் பகுதியின் நெடுஞ்சாலையின் அருகில் செயல்பட்டு வந்த செராமிக் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் டோல் கேட் அமைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்து போலி டோல் கேட் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு அரசாங்கத்திற்கு தெரியாமல் பணம் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது.
நாளை மின்தடை பகுதிகள் (07.12.2023) ! மொபைல்க்கு இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க !
குறைவான கட்டணம்:
அரசு அனுமதி பெற்ற டோல் கேட்டை விட குறைவான கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. அரசு நடத்தும் டோல் கேட்டில் 110 லிருந்து 530 வரை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலியாக செயல்படும் டோல் கேட்டில் ரூபாய் 20 திலிருந்து 200 வரை கட்டணம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டணம் குறைவாக இருப்பதால் அதிகமாக வாகன ஓட்டிகள் இந்த போலியான டோல் கேட்டை பயன் படுத்தி வந்துள்ளனர். பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் எதுவும் தெரிவிக்காத காரணத்தால் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு செல்லவில்லை.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை :
மேலும் வர்காசியாவில் செயல் பட்டு வரும் அரசு அனுமதி பெற்ற டோல் கேட்டை ஒப்பந்தத்திற்கு எடுத்திருந்த உரிமையாளர் மோர்பி மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் செய்த காரணத்தால் இந்த மோசடி சம்பவம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வைட் ஹவுஸ் செராமிக் என்ற நிறுவனத்திறன் உரிமையாளர் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல் துறையின் சார்பில் கூறப்பட்டுள்ளது.