#IndependenceDay: 78வது சுதந்திர தினம் 2024: இந்தியா முழுவதும் இன்று 78வது சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு துறை சார்ந்த பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த சிறப்பான நாளில் பெண்களுக்கான சுதந்திரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு நடை மாரத்தான் நிகழ்வை நடத்தியுள்ளனர்.
78வது சுதந்திர தினம் 2024
அதாவது இந்தியாவில் வாழும் பெண்கள் நள்ளிரவு நேரங்களில் எந்தவித அச்சமும் இன்றி சாலையில் நடந்து செல்ல முடியும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தான் இந்த நடை மாரத்தான் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் முன்னெடுத்துள்ளார்.
மேலும் இந்த விழா பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி கே.சரஸ்வதி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் கிருத்திகா சிவக்குமார், அமைப்பின் கவர்னர் தீபா சக்தி கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிலையில், இதில் 350க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பங்கேற்றனர். 78th independence day 2024
Also Read: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளர் யார்? வெளியான முக்கிய அறிவிப்பு!
அதன்படி நேற்று நள்ளிரவில் கொட்டும் மழை என்றும் கூட பாராமல் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக தேசிய கொடியை கையில் ஏந்தி கொண்டு வ உ சி பூங்காவில் தொடங்கி மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை சந்திப்பு பிரிவு, பெருந்துறை சாலை என கிட்டத்தட்ட 2.கி.மீ தூரம் வரை நடை மாரத்தான் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடந்து சென்றனர். night walk marathon by women
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்