95 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!95 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

95 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா: உலகத்தில் பொதுவாக பெரிதான பிரச்சனை என்றால் அது மக்கள் தொகை பிரச்சனை தான்.

இதனால் சில நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்கள் தொகை குறைந்து வரும் சில நாடுகளில் குழந்தைகள் பிறக்க வேண்டி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 95 ஆண்டுகளாக எந்த குழந்தையும் பிறக்கவில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை தான். வாடிகன் நாட்டில் தான் எந்த ஒரு குழந்தையும் பிறக்கவில்லை.

அதாவது கிறிஸ்தவர்களின் மூத்த தலைவர் போப் ஆண்டு வரும் நாடு தான் வாடிகன். மேலும் அந்த நாட்டில் கிறிஸ்தவ தலைவர்கள் இங்குதான் வசித்து வருகிறார்கள்.

மேலும் கிறிஸ்தவர்கள் குடும்பங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த நாடு கடந்த 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி  தான் முழு சுதந்திர உரிமை பெற்றது.

அப்போது இருந்து இப்பொழுது வரை இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்த நாட்டுக்கு சாதாரண மனிதனுக்கு அனுமதி இல்லை.

இந்த நாட்டில் குடியேற  வேண்டும் என்றால் அவர் ஒரு பாதிரியாராக அல்லது துறவியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நிரந்தரமாக அங்கு தங்க முடியாது. அவர்களின் பதவி காலம் வரை மட்டுமே தங்க முடியும். உலகில் மிக சிறிய நாடாக இருந்து வரும்  இந்த  வாடிகன் நாட்டில் மருத்துவமனை வசதி கிடையாது.

எனவே அந்நாட்டில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அருகில் உள்ள ரோமுக்கு சென்று தங்கி பிரசவம் பார்க்க வேண்டும்.

குழந்தை ரோம் நாட்டில் பிறப்பதால் அந்த குழந்தைக்கு ரோம் நாட்டின் குடியுரிமை கிடைக்கும்.

Also Read: பாகற்காய் ஜூஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? என்னென்ன தெரியுமா?

இதனால் தான் 95 வருடங்களாக வாடிகன் நாட்டில் எந்த ஒரு குழந்தையும் பிறக்கவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த நாட்டில் குழந்தை கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *