நைட் டிவி பாக்காமல் சாப்பிட மாட்டேன். இந்தியாவில் 97% மக்கள் இரவு உணவு உண்ணும்போது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதையே விரும்புகின்றனர். தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது டிவி இல்லாத வீடே இல்லை என்று கூறலாம். டிவி மக்களின் வாழ்க்கையோடு கலந்த ஒன்றாகி விட்டது. 1990 களில் தூர்தர்சனில் ஆரம்பித்தது இந்த டிவி மோகம். தற்போது கேபிள் டிவி, டிஷ் மற்றும் கைப்பேசியிலே டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ச்சிபெற்றுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., இது மட்டும் தெரிஞ்சா போதும்.., அரசு வேலை உங்க கையிலா தான் போங்க!!!
சிறியவர் முதல் வயதானவர் வரை அனைவரும் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதில் தனி சந்தோசம் உள்ளது. அதன்படி தற்போது ஒரு தனியார் நிறுவனம் இதைவைத்து ஒரு ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அந்த ஆய்வில் இந்தியாவில் வாழும் 97 % மக்கள் தாங்கள் இரவு உணவு உண்ணும்போது குடும்பத்துடன் டிவி யில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை விரும்புகின்றனர் என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
நைட் டிவி பாக்காமல் சாப்பிட மாட்டேன்
அதில் முதல் இடத்தில காமெடி நிகழ்ச்சிகளும், அதற்கு அடுத்த படியாக விளையாட்டு, காதல், திரில்லர் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகள், செய்திகள் ஆகியவை அடங்கும். டிவி நமது இல்லத்தில் இன்னொரு மனிதனாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.