தேமுதிக்கவிற்கு கேட்ட சீட்டு கிடைக்குமா ? தொடங்கியது அதிகாரபூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை - அதிமுக எத்தனை சீட் கொடுக்கும் !தேமுதிக்கவிற்கு கேட்ட சீட்டு கிடைக்குமா ? தொடங்கியது அதிகாரபூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை - அதிமுக எத்தனை சீட் கொடுக்கும் !

தேமுதிக்கவிற்கு கேட்ட சீட்டு கிடைக்குமா. நாடாளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை போன்ற வேளைகளில் மும்மரமாக இறங்கி செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அதிமுக – தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரபூர்வமாக தொடங்கியிருக்கிறது. சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதாவின் வீட்டிற்கு எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தனர். மேலும் எப்போதும் கூட்டணி கட்சிகள் தங்களை வந்து சந்திக்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் அதிமுக தற்போது தேமுதிகவை தேடி சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கு தேமுதிக 5 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதியும் கேட்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக தரப்பில் இருந்து 3 தொகுதிகளை ஒதுக்குவதற்கு மட்டுமே விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி ! நாவலூரில் இலவச மருத்துவமனை அமைக்க திட்டம் – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

இதனால் அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுக முக்கிய தலைவர்கள் பிரேமலதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *