2024 திருவாரூர் ஆழி தேரோட்டம். ஆசிய கண்டத்திலே புகழ்பெற்ற மிக பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் தியாகராஜ ஸ்வாமியின் ஆழித்தேரோட்டம் வருகிற மார்ச் மாதம் 21 ம் தேதி வடம் பிடித்து இழுக்கப்பட இருக்கிறது. அதை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
2024 திருவாரூர் ஆழி தேரோட்டம்
திருவாரூர்
தமிழ்நாட்டில் சைவ சமய கோவில்களில் திருவாரூர் தியாகராஜர் சன்னதி தான் முதல் கோவிலாக கருதப்படுகிறது. அந்த திருவாரூர் தியாகராஜ பெருமானின் ஆழித்தேரோட்டம் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்றது. காரணம் மற்ற கோவில்களில் இல்லாத அளவிற்கு அந்த தேரின் பிரமாண்டம் மற்றும் எடை. தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் தேர் ஊர்வலம் நடத்தப்படும். ஆனால் தேர் என்று சொன்னவுடன் அனைவரின் கவனத்திற்கு வருவது திருவாரூர் தேர் மட்டும் தான். இந்த திருவாரூர் தேரை காண்பவர்கள் உண்மையிலே மிகவும் பாக்கியம் செய்தவர்கள்.
தேரின் பிரமாண்டம்:
சாதாரணமாக இந்த தேர் 30 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்டது. 4 ராட்சத இரும்பு சக்கரங்களை கொண்ட இந்த தேர் சுமார் 220 டன் எடை கொண்டது. இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சொப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு அமைக்கப்படும். அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்தில் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் தேர் கட்டப்படும்.
மகா சிவராத்திரி 2024 ! சிவனடியில் சேர சிறந்த நாள் !
எடை
அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன்னாக அதிகரிக்கும். மேலும் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட 4 மரக்குதிரைகள் வடிவமைக்கப்படும். இந்த பிரமாண்ட தியாகராஜ ஸ்வாமியின் தேரோடு அம்பாள் தேர், விநாயகர் தேர், முருகன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் 5 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படும்.
2024 ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் சன்னதியின் பங்குனி திருவிழா பிப்ரவரி 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. அதாவது அஸ்தம் நட்சத்திரத்தில் குடியேறி ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் திருவிழா நடத்த படவேண்டும் என்பது ஆகமவிதி. அதன் படி அஸ்தம் நட்சத்திரதில் கொடியேற்றம் இனிதே நடத்தப்பட்டது. ஆசியாவிலே மிக பெரிய தேரான திருவாரூர் தேரானது வருகிற மார்ச் 21 ம் தேதி காலை 8.50 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்படும்.
12000 பேர்
ஆழித்தேரோட்ட திருவிழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்நின்று நடத்திஇருப்பதும் அதனை சுந்தரர் கண்டு பரவசம் அடைந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. முன்னொரு காலத்தில் இதன் பெரிய தேரை இழுக்க 12000 நபர்கள் தேவைப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.