JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை . இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் காட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் மும்மரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் ஆணையம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை நல்ல முறையில் நடத்தி முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தலை எவ்வாறு அணுக வேண்டும் மற்றும் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தல் :
அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மத வழிபாட்டு தளங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது.
தேமுதிக்கவிற்கு கேட்ட சீட்டு கிடைக்குமா ? தொடங்கியது அதிகாரபூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை – அதிமுக எத்தனை சீட் கொடுக்கும் !
தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடக் கூடாது.
ஜாதிய, மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சியினர் நாகரிகமாக பேச வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.