SETC பேருந்துகளில் முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு. கோயம்பேடு பேருந்து நிலையத்தை காலி செய்துவிட்டு கிளாம்பாக்கத்தில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தொடங்கப்பட்டு தற்போது பேருந்து நிலையம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
SETC பயணிகளுக்கு புதிய திட்டம் :
இதன் அடிப்படையில் SETC பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அவ்வாறு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ. 40/- கூடுதல் கட்டணமாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கலாம்.
Playstore-லிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 10 இந்திய App-கள்.., Google நிறுவனம் வைத்த செக்., என்ன காரணம் தெரியுமா?
மேலும் இந்த டிக்கெட்டை 4 மணி நேரத்திற்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.