JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS
மின்சார ரயில்கள் சேவை ரத்து ! 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மாலை வரை மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து :
சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமையான நாளை சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில்கள் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதனை போல தாம்பரத்திலிருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வழியாக வரும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SETC பேருந்துகளில் முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு ! ரூ. 40/- கட்டணம் செலுத்தினால் போதும் – அரசின் புதிய அறிவிப்பு !
7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் :
இந்த நிலையை கருத்தில் கொண்டு பொது மக்களின் வசதிக்காக நாளை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிப்படையில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களின் பயண நேரத்தை இதற்க்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.