அப்படி போடு.., தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார் வாரிசு?.., பெரிய டிவிஸ்ட் வைத்த படக்குழு!!அப்படி போடு.., தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார் வாரிசு?.., பெரிய டிவிஸ்ட் வைத்த படக்குழு!!

தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார் வாரிசு

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும்  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து தற்போது ஒரு நபர் இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் தனுஷ் தனது மூத்த மகனான யாத்ராவை அறிமுகம் செய்ய போகிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திடிரென விக்னேஷ் சிவனை Unfollow செய்த நயன்தாரா?.., அப்ப…, எல்லாம் ஓவரா?., அவரே போட்ட ஷாக்கிங் பதிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *