JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS
அரசு பஸ்சில் வந்து குண்டு வீசிய மர்ம நபர். பெங்களூரு குந்தலஹள்ளியில் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றன.
8 தனிப்படை அமைப்பு :
மேலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது உறுதி என கர்நாடக மாநிலத்தின் போலீஸ் மந்திரி பரமேஷ்வர் தெரிவித்துள்ளார். பரமேஷ்வர் கூறியதாவது இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டு எந்த வகையானது மற்றும் இதனை நிகழ்த்தியவர்கள் யார் என்றும் போலீசார் சிறப்பாக விசாரித்து வருகின்றனர் என்றும் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தல் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி எந்த தொகுதியில் போட்டி ? அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு – பாஜக மேலிடம் அறிவிப்பு !
அரசு பஸ்சில் வந்த மர்ம நபர் :
விசாரணையின் அடிப்படையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அரசு பஸ்சில் தான் ஓட்டலுக்கு வந்து சென்றுள்ளார் என்பது கேமரா பதிவின் ஆய்வில் போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் மர்மநபரின் உருவம், அவரது நடவடிக்கைகள் தெளிவாக பதிவாகி உள்ளது. ஆனால் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உறுதி குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது என்று போலீஸ் மந்திரி பரமேஷ்வர் கூறினார்