தமிழகத்தில் மாஸ் காட்டும்  "மஞ்சும்மெல் பாய்ஸ்" திரைப்படம்.., மொத்தம் வசூல் இத்தனை கோடியா?தமிழகத்தில் மாஸ் காட்டும்  "மஞ்சும்மெல் பாய்ஸ்" திரைப்படம்.., மொத்தம் வசூல் இத்தனை கோடியா?

“மஞ்சும்மெல் பாய்ஸ்” திரைப்படம்

மக்களின் ஃபேவரைட் சுற்றுலா தளமான குணா குகையில் கடந்த 2006ம் ஆண்டு குழிக்குள் சிக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான்  “மஞ்சும்மெல் பாய்ஸ்”. மலையாளத்தில் உருவான இந்த படத்தை சிதம்பரம் என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாலும், உலக நாயகன் கமல்ஹாசனின் குணா பாடல் இடம் பெற்றதாலும் கேரளாவை விட தமிழகத்தில் இப்படம் அதிக வசூலை அள்ளி வருகிறது.

சொல்ல போனால் பிரேமம் படத்தை விட இந்த படத்திற்கு அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சொல்ல போனால் ஒரு மலையாள படம் இந்த அளவுக்கு தமிழர்களின் நெஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. மேலும் குணா குகையில் குழிக்குள் விழுந்த நண்பனை, நண்பர்களாக சேர்ந்து காப்பாற்றிய கதையாக இருப்பதால் நண்பர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தமிழ்நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது குறித்து முக்கிய  தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மஞ்சும்மெல் பாய்ஸ் படம் உலக அளவில் ரூ. 60 கோடி வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டுடே ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகன ஓட்டிகளே உஷார்.., இதை செய்யலனா?.., ஹெல்மெட் போட்டாலும் ரூ.2000 பைன் தான்?.., அரசு அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *