JOIN WHATSAPP TO GET SPIRITUALITY NEWS
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில், குளச்சலுக்குத் தெற்கில் அமைத்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் தான் இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
பெண்களின் சபரிமலை :
இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. சபரிமலைக்கு எவ்வாறு ஆண்கள் மாலையணிந்து கொண்டு விரதமிருந்து இருமுடிக்கட்டி மலைக்கு செல்கிறார்களோ அதை போன்று பெண்கள் அனைவரும் விரதமிருந்து பொங்கலிட்டு இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
தமிழகத்தில் மாஸ் காட்டும் “மஞ்சும்மெல் பாய்ஸ்” திரைப்படம்.., மொத்தம் வசூல் இத்தனை கோடியா?
பகவதியம்மன் மாசி கொடை விழா :
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கோடைவிழாவானது மார்ச் 12 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து நடைபெறும். அம்மனுக்கு தினசரி பூஜை மற்றும் வெள்ளி தேரில் பகவதி அம்மன் பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகளுடன் மார்ச் 13 அன்று அதிகாலை நடைபெறும் ஒடுக்கு பூஜையுடன் விழாவானது நிறைவு பெறும். மேலும் விழாவில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.