கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள். சென்னை மாநகரில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கான கலைபோட்டிகள் மார்ச் 9 & 10 ஆகிய தேதிகளில் சென்னை அரசு இசைக்கல்லூரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள்
இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத்துறையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் மாவட்ட/மாநில அளவில் தமிழ்நாடு அரசு பண்பாட்டு துரையின் சார்பில் நடத்தப்படவேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற மார்ச் 9 & 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
மார்ச் 9 சனிக்கிழமை அன்று ஓவியம் மற்றும் கிராமிய நடனம் போட்டிகள் நடைபெறும். மார்ச் 10 ல் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போட்டிகள் நடைபெறும். இந்த குரலிசை போட்டியிலும், கருவியிசை போட்டியிலும் இசையினை முறையாக பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம். கருவியிசை போட்டியில் நாதஸ்வரம், வயலின் வீணை, புல்லாங்குழல் போன்ற இசை கருவிகளும் , தாள கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங் ஆகிய கருவிகளும் இடம் பெறுகின்றன. பரதநாட்டியம் பிரிவில் ஒரு மார்க்கம் தெரிந்தவர்கள் பங்கு பெறலாம்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவி ஆட்டம், காளையாட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்(பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடன போட்டிகள் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளிலும் போட்டியாளர்கள் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை. அதிகபட்சம் 5 நிமிடம் மட்டுமே தங்களது திறமைகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவர்.
வாகன ஓட்டிகளே உஷார்.., இதை செய்யலனா?.., ஹெல்மெட் போட்டாலும் ரூ.2000 பைன் தான்?.., அரசு அதிரடி!!
ஓவிய போட்டிகளில் அக்ராலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டும். ஓவிய தாள்கள் போட்டி நடத்தப்படும் இடத்தில் வழங்கப்படும்.நடுவார்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியம் தீட்டப்பட வேண்டும். அதற்கான கால அவகாசம் 3 மணிநேரம் மட்டுமே.
இப்போட்டிகளில் வெற்றி பெரும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.6000 வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ.4500 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3500 வழங்கப்படும். இந்த மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுமதிக்கபப்ட்டுவர்.
மேலும் இதை பற்றிய விவரம் தெரிந்து கொள்ள விரும்புவோர் சென்னை அரசு இசைக்கல்லூரியின் தொலைபேசி எண்ணான 044 -24937217 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அறிந்து கொள்ளலாம். இந்த நல்வாய்ப்பை சென்னை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.