கிரிக்கெட் வீரர் மரணம்
ஃபேவரைட் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பையின் மூலம் கடந்த 2004-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமானவர் தான் ரோஹித் ஷர்மா. கிட்டதட்ட 5 ஆண்டுகள் ஆடிய அவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ஓய்வு பெற்றார். அவர் விளையாடிய போட்டிகளில் இதுவரை 12.76 சராசரியுடன், 166 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 28 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 850 ரன்களை அடித்துள்ளார். இந்த போட்டியில் கிட்டத்தட்ட 2 சதம், 3 அரை சதங்களும் அடித்துள்ளார். இதற்கிடையில் நான்கு டி20 போட்டிகளில் விளையாடி 131 ரன்களை எடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்பிறகு இதையடுத்து பயிற்சி அகடமியை தொடங்கிய ரோஹித் சர்மா பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். வழக்கம் போல் அவர் பயிற்சி கொடுத்து வந்த அவர் இன்று திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் கொஞ்ச நேரத்தில் உயிரிழந்து விட்டார். 40 வயதாகும் ரோஹித் ஷர்மாவுக்கு சில ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.