அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் இது தான்?.., ரெடியான மாவட்ட உறுப்பினர்!!அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் இது தான்?.., ரெடியான மாவட்ட உறுப்பினர்!!

தவெக தலைவர் விஜய்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கத்தை “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியாக மாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க விஜய் மும்மரமாக இருந்து வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று விஜய் தெரிவித்த நிலையில், கட்சியின் புதிய செயலியை இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி இந்த வாரம் புதன் அல்லது வியாழக்கிழமையில் அறிமுகம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறதாம். மேலும் செயலியின் பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. வருகிற மே மாதத்திற்குள் அதிக உறுப்பினர்களை சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என்னது…, கமலின் “குணா படம்” இந்த ஆங்கில படத்தோட ரீமேக்கா?.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *