வசூலில் மாஸ் காட்டும் "மஞ்சும்மல் பாய்ஸ்".. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?.., எவ்வளவு தெரியுமா?வசூலில் மாஸ் காட்டும் "மஞ்சும்மல் பாய்ஸ்".. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?.., எவ்வளவு தெரியுமா?

“மஞ்சும்மல் பாய்ஸ்”

தற்போது சோசியல் மீடியாவில் எங்க பார்த்தாலும் ஒரே படத்தை பற்றி தான் ரசிகர்கள் பேசி வருகிறார். அது வேற எந்த படமும் இல்லை மலையாளத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்” தான். மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் இந்த வருடத்தின் மிக முக்கிய படமாக விளங்கி வருகிறது. குறிப்பாக மலையாளத்தை விட தமிழ்நாட்டில் தான் இந்த படம் அதிகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் ரசிகர்கள் ஒரு மலையாள படத்தை இந்த அவளுக்கு கொண்டாடுகிறார்கள் என்றால் அப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதால் தான். கொடைக்கானலுக்கு செல்லும் 11 நண்பர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி கொள்கிறார்.

அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை. இதில் கமல் நடித்த குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்” பாடலை இயக்குனர் சரியான இடத்தில் வைத்துள்ளார். அது தன இந்த படத்தோட பிளஸ் பாய்ண்ட் என்று சொல்லலாம். கடந்த மாதம் 22ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரை வசூலித்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்து இயக்குனர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இயக்குனர் சிதம்பரம் இயக்கிய “மஞ்சும்மல் பாய்ஸ்” மொத்தமாக 100 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 17.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிக வசூல் செய்த மலையாள திரைப்படம் என்ற பெருமையை  “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படம் பெற்றுள்ளது. 

சூப்பர் ஸ்டார் பட நடிகரின் மகன் திடீர் கடத்தல்.., பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்.., கோலிவுட்டில் பரபரப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *