மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்
தமிழகத்தில் வாழும் பெண்களை கவரும் வகையில் அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் உரிமை தொகை ரூ. 1000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேர ஏகப்பட்ட பெண்கள் விண்ணப்பித்தும் வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். இதில் பல திட்டங்களை முன் வைத்தும் அதற்கான தொகை எவ்வளவு குறித்தும் விளக்கம் கொடுத்தார். அதில் முக்கியமான ஒன்றான 18 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும். மேலும் இந்த புதிய திட்டத்திற்காக சுமார் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், இந்த திட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.