தென்காசியை குறிவைத்த கிருஷ்ணசாமி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரு பிரதான கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் பணிகளில் தீவிரம் கட்டிவருகின்றனர். இதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி :
தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனாதனம் விவகாரம்.., விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு!!
தென்காசி தொகுதி ஒதுக்கீடு :
இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.