ரூ.2 லட்சம் நிதி உதவி
பொதுவாக கணவனை இழந்து தவித்து வாழும் பெண்கள் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் ஊக்குவிக்கவும் பல மாநிலங்கள் சிறந்த திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஒரு திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது கணவனை இழந்து விதவையாக இருக்கும் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள அவர்கள் ஊக்குவிக்கும் விதமாக விதவை மறுமணம் என்ற திட்டத்தை மாநில அரசு நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த திட்டத்தின் கீழ் மறுமணம் செய்யும் விதவைகளுக்கு தலா இரண்டு லட்சம் கொடுக்க அரசு சார்பாக வழங்கப்படும். இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை செயலாளர் மனோஜ் குமார் பேசுகையில், ” ஜார்க்கண்ட் விதவை ஊக்குவிக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதன் மூலம் விதவை பெண்கள் கண்ணியத்துடன் நடத்த படுவார்கள் என கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான பெண்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.