“தாரை தப்பட்டை” நடிகர்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குனர் பாலா. தற்போது இவர் இயக்கத்தில் வணங்கான் என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில், சில காரணத்தால் அவர் வெளியேறி அருண் விஜய் உள்ளே நுழைந்து படத்தை முழுவதுமாக நடித்து கொடுத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பாலா குறித்து சில சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் கூட மமிதாவை அவர் அடித்ததாக கிளம்பிய பரபரப்பு இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் பாலா சிக்கியுள்ளார். ஆனால் இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சமாச்சாரம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது சசிகுமார் நடித்த “தாரை தப்பட்டை” படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த அமுதவாணன் பாலாவிடம் ஆடிசனுக்கு சென்ற போது மிமிக்ரி செய்து காட்டினாராம். அப்போது அவர் அஜித் போல் பேசி காமிக்கும் போது மீசையை பிடித்து காமித்துள்ளார். இதை பார்த்த பாலா ஷூட்டிங் போகும் வரும் பொழுது மீசையை எடுத்துவிட்டு வர சொல்லியுள்ளார். வேறு வழியில்லாமல் மீசையை எடுத்துவிட்டு தலைமுடியையும் கட் செய்து இருக்கிறார் அமுதவாணன். தற்போது இந்த விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. பாலாவை சைக்கோ இயக்குனர் என்று கூறிவரும் நிலையில் இந்த செய்தி அதை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.